Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கல்மடு குளப்பகுதியில், இன்று (25) காலை பத்து பெரல் கோடாக்கள் அழிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கல்மடு குளப்பகுதியில் இயங்கிய, சட்டவிரோத மதுபானம் காய்ச்சும் இடமொன்று தொடர்பாக, கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், இன்று (25) காலை அவ்விடத்தைச் சுற்றிவளைத்தனர்.
இதன்போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து, பத்து பெரல் கோடாக்களை மீட்ட பொலிஸார், அவற்றை அழித்துள்ளனர்.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில், தொடர்ச்சியாக சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடங்களை இனங்கண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago