2025 மே 09, வெள்ளிக்கிழமை

100 கிலோ தங்கூசி வலைகள் மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - கரைச்சி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில், மறைத்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோகிராம் மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள், நேற்று 31) மீட்கப்பட்டன.

இதன் போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட வலையின் பெறுமதி ஏறத்தாழ 15 இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்கது என, முல்லைதீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளதுடன், மீட்கப்பட்ட வலைகள் கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X