2025 ஜூலை 14, திங்கட்கிழமை

100 நாள் திட்டத்தில் எமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்: அடைக்கலநாதன்

Gavitha   / 2015 ஜனவரி 13 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

எங்கள் கோரிக்கைகள் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற வேண்டும் என்பதே எமது நோக்கம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா வைரவ புளியங்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த அமைச்சரவை மூன்று மாதங்கள் இருக்கும். இந்நிலையில் கடந்த அரசில் எங்களுடைய அரச உத்தியோகஸ்தர்கள், திணைக்கள தலைவர்கள், கிராம மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் இவை அத்தனையையும் தன்னுடைய அமைச்சர்களால், அவர்கள் சொல்லும் வேலையை செய்கின்றவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள்.

அதன் அடிப்படையில், ஊழல் நிறைந்து போய் இருந்தது. எங்களுடைய பிரதேசம் மற்றும் மக்கள், கவனிப்பாரற்று இருந்தார்கள். அந்த வகையில் அந்த ஆட்6சி முடிவுக்கு வந்திருக்கின்றது.

எங்களுடைய அதிகாரிகள், மக்களுக்கு சேவையாற்றும் திறமையுடையவர்கள். அவர்களை அவர்களுடைய பணியை செய்ய விட்டால் மக்களுக்கு நன்மைகிட்டும்.

புதிய அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கின்ற காரணத்தால், எங்களுடைய பிரதேசங்கள் முன்னேறுவதற்கான பங்களிப்பு செயற்பாட்டை செய்ய இருக்கின்றோம். அத்துடன் கண்காணிப்பிலும் ஈடுபடுவோம்.

இந்நிலையில், அமைச்சருக்கு பின்னால் போவதும் குறிப்பிட்ட அமைச்சருக்கு தலைசாய்ப்பதுமான நிகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும். அதிகாரிகள் தமது திறமையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

அமைச்சர்களுக்கு அதிகாரிகள் சலாம் போடுவதை நிறுத்தவேண்டும். நாம் கண்காணித்து அவ்வாறானவர்கள், அவ்வாறான அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பிரதமருக்கும் உடன் தெரியப்படுத்தி தட்டிக்கேட்கும் வகையில் எமது செயற்பாடு இருக்கும்.

இதேவேளை, இனப்பிரச்சனை உட்பட அரசியல் கைதிகளாக சிறையில் உள்ள எமது இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் மீள் குடியேற்றம் எமது மக்கள் தங்களது சொந்த காணிகளில் இடம்பெறவேண்டும் என்பதும் எமது மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க காரணமான வட மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அரச அதிபர்கள் மாற்றப்பட்டு, சிவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அமர்த்தப்படவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.

எமது மக்களின் சுதந்திர வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்துக்கு இந்த அரசை பயன்படுத்தவுள்ளோம். அந்த வகையில் எமது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் ஆர்வத்தையும் செயற்பாட்டையும் இந்த அரசு பார்த்திருக்கின்றது என்பதனால், எமது மக்களுக்கு செய்யவேண்டிய தேவையும் கடமையும் இந்த அரசுக்கு உள்ளது.

அதேவேளை, மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும் என கோரியுள்ளோம். அது நடைமுறைக்கு வரும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .