Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில், நேற்று (22) வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்மைவாக, இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அங்குக் காணப்படும் பற்றைக்காடு ஒன்றில் காணப்பட்ட பொதி தொடர்பில் சோதனையிடுவதற்காக, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து, நேற்றுக் காலை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அந்தப் பையிலிருந்து, 11 வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை, தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
41 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
24 Mar 2026