2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 124 இராணுவத்தினர் பயிற்சி நிறைவு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய், ஆலங்குளம் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 124 இராணுவத்தினர் தங்களுக்கான பயிற்சிகளை நிறைவு செய்து சனிக்கிழமை (17) வெளியேறினார்கள்.

65ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸின் தலைமையில், ஆலங்குளம் இராணுவ பயிற்சி முகாமில் சனிக்கிழமை (17) நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளுடன் இவர்கள் தங்கள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினார்கள்.

ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இராணுவ பயிற்சிகளில் இணைந்த, 11 தமிழ் இளைஞர்களும், 113 சிங்கள இளைஞர்களும் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினார்கள்.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மாயான் வினேஷ் என்பவர், பயிற்சியின் போது சிறந்த இராணுவ வீரனாக தெரிவு செய்யப்பட்டு, வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .