2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

15 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Kogilavani   / 2014 மார்ச் 06 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் புதன்கிழமை (5) இரவு கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் வியாழக்கிழமை (6) உத்தரவிட்டார்.

3 படகுகளில்  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 15 இந்திய மீனவர்களை கடற்படையினர் புதன்கிழமை (5) கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 15 மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், குறித்த மீனவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு (20 ஆம் திகதி வரை) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை வியாழக்கிழமை (6) காலை மேலும் 2 படகுகளில் தலைமன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில்ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களை கடறபடையினர் கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .