2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாப்பரசரின் மடு விஜயம்: பாதுகாப்பு கடமையில் 2,600 பொலிஸார்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 13 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் மடு விஜயத்தின் போது அங்கு 2,600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருத்தந்தையின் மடு விஜயத்தையொட்டிய பாதுகாப்பு கடமைகள் அனைத்தும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 2,600 பொலிஸார் மடு சூழலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளை பொலிஸார் தவிர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரும் ஆலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர். பாப்பரசரின் வருகைக்காக வத்திக்கான் பொலிஸாரும் மடுத்தேவலாயத்தில் காவல் கடமையில் ஈடுபட இருக்கின்றனர்.  

பாப்பரசர், புதன்கிழமை (14) மடுத்திருதலத்தில் மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரையில் இடம்பெறவிருக்கும் விசேட ஆராதனையில்; பங்குகொண்டு மக்களுக்கு இறை ஆசி வழங்குவார்.

இங்கு கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத மக்களையும் போரால் உடல் நலம் குன்றிய மக்களையும் சந்தித்து தமது உடனிருப்பையும் இறை கரிசனையையும் திருத்தந்தை பிரான்ஸிஸ் வெளிப்படுத்தவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .