2025 ஜூலை 17, வியாழக்கிழமை

20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி (22) கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும், மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மடுவில் வைத்து இன்று (15) வெள்ளிக்கிழமை  விடுதலை செய்தார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி 4 படகுகளில் தலைமன்னார் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர் விசாரணைகளின் பின், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின் 23-07௨014 அன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, குறித்த மீனவர்களை விளக்க மறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார். ந்குறித்த மீனவர்கள் தொடர்ந்து மூன்று தடவைகள்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பறிந்துரை விடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் சுதந்திரதினமான இன்று (15) குறித்த 20 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த 20 இந்திய மீனவர்களும் இன்று வெள்ளிக்கிழமை மடு சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை கடற்படையூடாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி ரி.வினோதன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X