2025 ஜூலை 23, புதன்கிழமை

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் புதிய பாடசாலை திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 03 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.றொசேரியன் லெம்பேட்


முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்;பட்ட 'வேப்பங்குளம் பிச்சை வாணிப நெடுங்குளம்' கிராமத்தில் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய பாடசாலை வியாழக்கிழமை (2) காலை திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'மன்-இக்ர ஃ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

மீள் எழுச்சித்திட்டத்தின் நிதியுதவியுடன் சுமார் 18 இலட்சம் ரூபாய் செலவில் இப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை தரம் 1 முதல் தரம் 5 வரை இயங்கவுள்ளது.

இப்பாடசாலைக்கு அதிபர் ஒருவரும் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வியாழக்கிழமை காலை குறித்த நிகழ்வில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எம்.எஹியா, உப தலைவர் எஸ்.எம்.பௌறூஸ், மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் லியோன் ரெவல், அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் அலிக்கான் செரீப், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் உட்;பட பலர் கலந்துகொண்டனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .