2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 06 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதுடன்,  கடற்காற்றும் வீசி வருகின்றது. இந்த நிலையில், மன்னார் மாவட்ட மீனவர்களை மறு அறிவித்தல்வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மீனவர்கள் எவரும் இன்று திங்கட்கிழமை (6) கடற்றொழிலுக்குச்  செல்லவில்லை என  மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க,  மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப்பகுதிகளிலுள்ள மக்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு மன்னார் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒலிபெருக்கி மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) இரவும் இன்று திங்கட்கிழமை (6) காலையும் அறிவித்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .