2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் நவீன வசதிகளுடன் மலசலகூடம் மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின்  அடம்பன், நானாட்டான் பொதுச்சந்தை வளாகங்கள், மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட வளாகம் ஆகியவற்றில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட  பொது மலசலகூடம்  மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மன்னார் மாவட்ட  அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை (06) கையளித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட அடம்பன் பொதுச்சந்தைக் கட்டிட வளாகத்தில் 47 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கட்டிடத்தொகுதி மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ஜெனிங்ஸிடம் கையளிக்கப்பட்டது.  நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட நானாட்டான் பொதுச்சந்தை வளாகத்தில்  53 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி  கட்டிடத்தொகுதி நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் எஸ்.அன்புராஜ் லம்பேட்டிடமும்  மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட வளாகத்தில் 53 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கட்டிடத்தொகுதி மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானகப்பிரகாசத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்படி கட்டிடத்தொகுதிகளுக்கான நிர்மாணப் பணிகள் 2013ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.

விசேட தேவையுடையோர்களும் பயன்படுத்தும் வகையில் மேற்படி பொது மலசலகூட மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .