2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதார ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
நவரத்தினம் கபில்நாத், கனகரத்தினம் கனகராஜ், ரொமேஸ் மதுசங்க

வவுனியா பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதார ஊழியர்கள் தாம் பணியாற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் (7) ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், வேலைப்பகுதி தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல வருடங்கள் தற்காலிக அமைய அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியாகளுக்கு அவர்களிடம் இருக்கும் கல்வித் தகைமைக்கே நியமனம் வழங்கப்படவேண்டும்.

பல வருடங்கள் கடமையாற்றி வந்த ஊழியர்களிற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் தற்போது அவர்கள் பணியாற்றுகின்ற பதவியிலேயே நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தமக்கு அதிகப்படியான கல்வித்தகைமை கேட்கப்படுவதாகவும் எனினும் தாம் நீண்ட காலமான சுகாதார தொழிலாளர்களாக பணியாற்றிய நிலையில் தற்போது இவ்வாறான செயற்பாடுகளை அதிகாரிகள் முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் இ. சித்திரன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் ஆர். இந்திரராஜா, எம். தியாகராஜா மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி தொகுதி தலைவர் இராஜ. குகனேஸ்வரன் உட்பட அக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளும் வருகை தந்து கலந்துரையாடியிருந்தனர்.

எனினும் தமது கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான முடிவு எடுக்கப்படவில்லை எனில் தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வவுனியா நகரசபையில் 14 காவலாளிகளும், 11 சாரதிகளும், 53 சுகாதார தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 19 சுகாதார தொழிலாளர்களும் 7 சாரதிகளும் நிரந்தரமாக்கப்படவேண்டும் எனவும் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் இ. சித்திரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .