2025 ஜூலை 23, புதன்கிழமை

திருவள்ளுவர் வித்தியாலயத்தில் அடிப்படை வசதியின்மை; கல்விப் பணிப்பாளர் மறுப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, பாண்டியன்குளம் திருவள்ளுவர் ஆரம்ப வித்தியாலத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லையென்று மாணவர்களின் பெற்றோர்களினால் கூறப்பட்ட கருத்தினை மறுதளித்த துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் எல்.மாலினி வெனிஸ்ரன், இப்பாடசாலைக்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், மலசலகூடமும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாண்டியன்குளம் திருவள்ளுவர் ஆரம்ப வித்தியாலயம் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் இங்கு கல்வி கற்று வரும் 138 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாணவர்களின் பெற்றோர்கள்; தமிழ்மிரருக்குத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'இப்பாடசாலை அரசாங்கத்தின் 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்துக்குள் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அத்திட்டத்தின் கீழ் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

அத்துடன், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மலசலகூடங்கள் அமைப்பதற்காக 14 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, மலசலகூடங்களும் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இம்மலசலகூடங்கள் அமைக்கும் பணிகள் ஜனவரி 2ஆம் திகதிக்குள் முடிவடையவுள்ளதாகவும் அதன்பின்னர் அதனை பாடசாலை நிர்வாகத்திற்கு கையளிக்கவுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .