2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியா வடக்கில் மது, புகைத்தல் இல்லாதொழிக்க உறுதிமொழி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்குப் பிரதேசத்தில் 'மது மற்றும் புகைத்தலை  இல்லாதொழிக்க பாடுபடுவோம்' அப்பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களும் மாணவர்களும் இன்று வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்தனர்.

இதனை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணமுடியும் என்ற நோக்கில், வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கும் பின்னர்  நெடுங்கேணி மகாவித்தியாலயம்வரை விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றன.

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் முன்பாக இவ்வாறு உறுதிமொழி எடுத்தனர்.

சுகாதாரத் திணைக்களத்தினுடைய சுகாதார கல்விப்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன், சுகாதார கல்விப் பிரிவு அதிகாரி கே.கேதீஸ், மாணவர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .