2025 ஜூலை 23, புதன்கிழமை

சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கு நிரந்தரக் கட்டடம் நிர்மாணிக்க நிதியுதவி

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மூன்று சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கு நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை சமுர்த்தி அதிகார சபை 75 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கறைத்துறைப்பற்று மஹா சங்க முகாமையாளர் கே.தேவகுமார் தெரிவித்தார்.

கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி மஹா சங்கத்தின் கீழ் இயங்குகின்ற முள்ளியவளை, சிலாவத்தை, செம்மலை ஆகிய மூன்று சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கே நிரந்தரக்கட்டடம் அமைப்பதற்காக தலா 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த பல வருடங்களாக குறித்த மூன்று சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் வங்கி நடவடிக்கைகள் மஹா சங்கத்தின் கீழ் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இயங்கி வந்ததுடன்,  கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து, மூன்று வங்கிச் சங்கங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இன்று வரைக்கும் தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .