2025 ஜூலை 23, புதன்கிழமை

புராதன விகாரைக்கருகில் புதையல் தோண்டிய ஐவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க

வவுனியா, மகாகச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள புராதன விகாரைக்கு அருகாமையில் புதையல் தோண்டிய ஐவரை வவுனியா பொலிஸார் கைது நேற்றிரவு செய்துள்ளனர்.

புராதன விகாரை அமைந்துள்ள பகுதியில் பற்றைக்காடுகள் காணப்பட்ட நிலையில் அங்கு மறைவாக இருந்து புதையல் தோண்டிவந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக சிலர் புராதன விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சென்று வருவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .