2025 ஜூலை 23, புதன்கிழமை

ஒளவையாரின் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தமிழ் சைவப்புலவர்களில் ஒருவரான ஒளவையாரின் நினைவுதினம் வவுனியாவிலுள்ள வெளிக்குளத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, இவரது உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்தும் மலர்கள்  தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டன.  பின்னர் ஒளவையார் பற்றிய உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

குமாரசாமி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையிலும்; நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன், குமாரசாமி நற்பணி மன்றத்தின் தலைவர் தேசமான்ய சு.குமாரசாமி, கால்நடை வளர்ப்போர் சங்கத் தலைவர் எஸ்.கந்தசாமி, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒளவையாரின் நினைவுதினம் பற்றிய தகவல்கள் வரலாற்றுப் பதிவுகளாக இல்லாத நிலையில், ஒவ்வொரு வருடமும் தை பௌர்ணமி தினத்தில் இவரது நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .