2025 ஜூலை 23, புதன்கிழமை

அங்கவீனமானவர்களை தொழிற்பயிற்சிகளில் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் அங்கவீனமானவர்களை  வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை கிளிநொச்சி மத்திய ஒத்துழைப்பு நிலையத்தில் எதிர்வரும் திட்கட்கிழமை  நடைபெறவுள்ளதாக சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுசா கோகுல பெர்ணாண்டோ தெரிவித்தார்.

கண்டாவளை, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 16 வயது முதல் 35 வயது  வரையானவர்கள் இதில்  கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இதில் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் சமூக சேவைகள் அமைச்சினால் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  இங்கு இவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .