2025 ஜூலை 23, புதன்கிழமை

புகைத்தலுக்கு எதிராக மன்னாரில் ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

                                                    
'புகைத்தல் அற்ற ஆரோக்கிய வாழ்வு' எனும் தொனிப்பொருளில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.என்.சில்றோய் தலைமையில், அப்பணிமனைக்கு முன்பாக ஆரம்பமான   ஊர்வலம் மீண்டும் பணிமனையை வந்தடைந்தது.

இதில் கலந்துகொண்டவர்கள் புகைத்தலுக்கு எதிராக பதாகைகளை தாங்கியிருந்தனர்.

புகைத்தல் எதிர்ப்பு தினம் ஜனவரி மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .