2025 ஜூலை 23, புதன்கிழமை

பம்பைமடுவில் வலுவிழந்தோர் சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்


முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோருக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வவுனியா, பம்பைமடு பிரதேச ஆயர்வேத மருத்துவமனை வளாகத்தில் இன்று (17) இன்று திறந்துவைக்கப்பட்டது.

இதன் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்து உறவினர்களால் பராமரிக்க முடியாதவர்களை வட மாகாண சபையினால் பராமரிப்பதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'வைகறை' என்று பெயரிடப்பட்ட இந்த பராமரிப்பு நிலையத்தினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.

'20 பேரை பராமரிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பராமரிப்பு விடுதியானது இன்று தொடக்கம் செயற்படவுள்ளது' என்று வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி பண்பாட்டு அமைச்சர் த.குருகுலராஜா உட்பட வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .