2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து அணிகலன்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க, எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி நேற்று (17) எட்டாவது தடவையாக தோண்டப்பட்ட போது அதிலிருந்து மேலுமொரு மனித மண்டையோட்டின் சிதைவுகள், உடைந்த காப்பு மற்றும் முத்து மணிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனித புதைகுழி, நீதவான் ஆனந்தி கனகரட்ணம், அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணிவரை மீண்டும் தோண்டப்பட்டது.

இதன்போது ஒரு மனித எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகள், உடைந்த காப்பு, முத்து மணிகள் சிலவும் குறித்த புதை குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த புதைகுழியிலிருந்து இதுவரையில் 37 எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, புதைகுழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மாந்தை ஆலயத்திற்கு முன் சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள வீதிக்கு அருகில் நீர் இணைப்பிற்கு பள்ளம் தோண்டிய போது மேற்படி எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது குறித்த பகுதி தோண்டப்பட்டு தொடர்ச்சியாக மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .