2025 ஜூலை 23, புதன்கிழமை

கல்வியில் வீழ்ந்துவிடாத சமுதாயமாக நாம் என்றும் திகழவேண்டும்: சிறிதரன்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


கல்வியில் வீழ்ந்துவிடாத ஒரு சமுதாயமாக தமிழர் சமுதாயம் திகழவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் ஸ்தாபகர் தினவிழாவும் கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் தி.வரதன் தலைமையின் நேற்று (17) நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

'நானும் ஒருகாலத்தில் இப்பிரதேசத்தின் பாடசாலைகளில் அதிபராக ஆசிரியராக பணி செய்தவன் என்ற வகையில் ஒரு பாடசாலையின் முன்னேற்றம் அதற்கான அர்ப்பணிப்புகள் உழைப்பு என்பது பற்றிய பக்கங்களை நானறிவேன். இப்பாடசாலை கிளிநொச்சி பாடசாலைகளில் சாதனைப் பாடசாலைகளில் ஒன்று. வியக்கத்தகு சாதனைகளை இந்தப் பாடசாலை படைத்திருக்கின்றது. பல்வேறு நாடுகளில் பல்வேறு கல்விக் கொள்கைகள் நிலவுகின்றன. அவை அந்தந்த நாட்டின் முன்னேற்றத்தின் பலமாக இருக்கின்றன. எமது நாட்டின் கல்விகொள்கைள் பற்றி சிந்திக்கின்றபோது எமது மாணவர்களின் ஆற்றல் நசுக்கப்படுவனூடாக எமது இனத்தின் எதிர்காலத்தை நசுக்குவதாகவே அமைந்தது.

நீங்கள் தரப்படுத்தலை நன்றாகவே அறிவீர்கள் இறுதியில் பெரும்பெரும் மரணமுமாகமாறிய காலத்திற்கு இந்த கல்வி கொள்கையும் ஒரு காரணமென்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே பல்வேறு தடைகள் எமக்கு பல்வேறு நிலைகளில் இருந்த போதும் நாம் இன்று எம்மிடம் இருக்கக்கூடிய எமது இரத்தத்தில் கலந்த அறிவு ஜீவிதம் எம்மை வீழ்ந்துவிடாமல் காத்து வைத்துள்ளது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. 

எனக்கு சனானா கல்விகொள்கை நினைவுக்கு வருகின்றது. அவர் அறிவால் மாற்றங்களை ஏற்படத்த முடியும் என்பதை நம்புகின்றவர். அவர் பெற்றோர்களை நோக்கியே தனது சிந்தனாவாதத்தை விதைத்தார். எனவேதான் இன்றைய எமது சூல்நிலையில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் புறச்சூழலில் எமது மாணவர்களை வேறுதிசையில் திருப்பக்கூடிய பலகாரணிகள் உண்டு. எனவே தான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் கண்ணாயிருங்கள். பிள்ளைகள் பற்றி கனவு காணுங்கள். நீங்கள் நினைக்கிற வைத்தியனாக,நீங்கள் நினைக்கிற பொறியியலாளனாக அவர்களை மாற்றாமல் அவர்கள் நினைக்கிற வைத்தியனாகஇ ஆசிரியனாக சிந்தனையாளனாக அவர்களைவர இடம்கொடுங்கள்.

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் ஒருவனின் பேட்டி ஒன்றைப் பத்திரிகையில் பார்த்தேன். அதில் அவன் தன் எதிர்கால இலட்சியம் தான் ஒரு விமானப் பொறியியலாளனாக வரவேண்டுமென ஆசைப்படுகின்றேன் என்று தெரிவித்திருந்தான். அவனுடைய அந்த பெரியகனவு எமது மண்ணில் எல்லா மாணவர்களுக்கும் வேண்டும். நாம் வீழ்ந்துவிடக்கூடாது வீழந்;தாலும் வீழ்ந்தேகிடக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

முருகானந்தாகல்லூரியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கும் பதக்கங்களும் கேடயங்களும் பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கபட்டனர். 

அத்துடன்இ கல்லூரியின் அருகே உள்ள கல்லூரி வீதி 'கல்லூரி வீதி' என பெயர் சூட்டப்பட்டு சிறிதரனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .