2025 ஜூலை 23, புதன்கிழமை

செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு மேலும் விடுதி தேவை: செ.பத்மநாதன்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தற்போது 03 விடுதிகளுடன் இயங்கிவருகின்ற கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு மேலுமொரு விடுதி  தேவைப்படுவதாக நெடோ அமைப்பின் தலைவர் செ.பத்மநாதன் தெரிவித்தார். 

இதற்கு உதவி வழங்க விரும்புகின்றவர்களின் அனுசரணை வேண்டுமெனவும் அவர் கோரினார்.

கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் முதலாம் ஆண்டு நிறைவுதினம் செஞ்சோலை சிறுவர் இல்ல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

 '19 சிறார்களுடன்; ஆரம்பித்த இச்சிறுவர் இல்லமானது தற்போது  80 இற்கும் மேற்பட்ட சிறர்களுடன் இயங்குகின்றது. 

மாணவர்கள் தங்களது ஏழ்மையை கருத்திற்கொள்ளாது கல்வியைத் தொடர்வதற்கு நாம் வழிவகுக்க வேண்டும். அத்துடன்,  சிறந்த உணவையும்  தங்குமிட வசதிகளையும்; வழங்கி இவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எமது பிள்ளைகளுக்கு அன்பு, ஒழுக்கம் சார்ந்த கல்வியை நாம்  ஊட்டி வருகின்றோம். இவற்றில் வெற்றியும் அடைந்துள்ளோம்.
இதற்குச் சான்றாக அண்மையில் அவுஸ்திரேலியாவிலிருந்து எமது இல்லத்திற்கு 'கிம்' என்ற பெண்ணொருவர் வருகை தந்திருந்தார். இவர் இச்சிறார்களுடன் அன்பாகப் பழகிவிட்டு, அவுஸ்திரேலியா சென்ற பின்னர் தனது நண்பர் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அந்தக் கடிதத்தில், இச்சிறுவர்களின் ஒற்றுமையும்  அன்பையும் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  சிறார்களின் கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இல்லமாக செஞ்சோலை உள்ளது.  பல்வேறு சம்பவங்களால் பிள்ளைகள் தமது குடும்பங்களை இழந்து நிற்பதை நினைத்து நான் கவலையடைகிறேன்.

குடும்பம் என்பது எப்போதும் இரத்த உறவாக இருப்பதில்லை. குடும்பம் என்றால் என்ன என்பதை இச்சிறார்களின் உணர்வுகளிலிருந்து நான் அனுபவமாக பெற்றுக்கொண்டுள்ளேன்  என அவர் தெரிவித்திருந்தார்' என்றார். 

இந்த சிறுவர் இல்லத்திற்கு  அனுசரணையாக இருந்தவர்களுக்கும் செ.பத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக நெடோ அமைப்பின் தலைவர் செ.பத்மநாதன், கிளிநொச்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேசலிங்கம், கிளிநொச்சி மாவட்ட உளவளத் துணையாளர் க.கோபி, முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ந.ராஜன், கனடா வாழ் உறவு பேரின்பநாயகம் சின்னத்துரை இராசதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .