2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பா.டெனிஸ்வரன் - வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மன்னார் அலுவலகர்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகர்களுக்கும் இடையில்  மன்னார் நகரசபை மண்டபத்தில் வியாழக்கிழமை (06) சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி திணைக்களங்களின் குறைபாடுகள், திணைக்களத்தின் செயற்பாடுகள், திணைக்களத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன்,  அலுவலகர்களின்; பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், குறித்த அலுவலகர்களின் பிரச்சினைகள் தொடர்பில்  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில்  அமைச்சின் செயலாளர் கே.வரதீஸ்வரன், வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெ.ஜெ.எஸ்.பெலிசியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .