2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சாரணர் நட்புறவு பாசறை

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை இன்று (7.3.14) ஆரம்பமானது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்;வில் வட மாகாண கல்விப்பணிப்பாளர் வி.செல்வராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 8 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிழக்வில் பிரதம விருந்தினராக வவுனயா தெற்கு கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.அன்ரன் சோமராஜாவும் மாலை நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனயா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனும் சிறப்பு விருந்தனராக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஆர்.நித்தியானந்தனும் கலந்துகொள்ளவுள்ளதுடன் வவுனியா நகர மணிக்கூட்டுக்கோபுரத்தில் இருந்து கலாசார நிகழ்வுகள் ஆரம்பமாகவும் உள்ளது.

இதன்போது நகரவீதி வழியாக கலாசார பவனியும் இடம்பெறவுள்ளதுடன் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் இரவு நேர நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .