2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட திரிசூலத்தை பயன்படுத்தி கணினி திருட்டு: குப்பை கூடையையும் காணவில்லை

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இரவு கணினி திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயமொன்றில் இருந்து களவாடப்பட்ட திரிசூலமொன்றினால் பாடசாலையின் கணினி அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி திருடப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலையில் இருந்த குப்பைக்கூடையொன்றும் காணாமல் போயுள்ள காரணத்தால் திருடப்பட்ட கணினி அக் குப்பைக்கூடையினுள் மறைத்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இப் பாடசாலையில் இரவு நேர காவலாளிகள் இல்லாத நிலையில் அண்மைக்காலத்தில் மூன்றாவது தடவையாகவும் பாடசாலை கணினி திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .