2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஊஞ்சல் கயிறு இறுகி சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

மன்னார் மாவட்டத்தின் பன்னவட்டுவான் பகுதியைச்  சேர்ந்த ரூபசிங்கம் சஜிதா (வயது 14) என்ற சிறுமி ஊஞ்சல் கயிறு இறுகி ஞாயிற்றுக்கிழமை (09) காலை உயிரிழந்ததாக மன்னார் முருங்கன் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் இச்சிறுமி  விளையாடிக்கொண்டிருந்தபோது, ஊஞ்சல் கயிறு தற்செயலாக இவரின்  கழுத்தில் இறுகியதாகவும் இந்நிலையில், இவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வருபவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .