2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முசலி மறிச்சிக்கட்டி முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 09 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம முஸ்ஸிம் மக்கள் தமது காணிகளை கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளனர் எனக்கூறி ஞாயிற்றுக்கிழமை (9) மறிச்சிக்கட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் அபகரித்துள்ளதாகவும் இதனால் தாம் நிறந்தர காணி இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இராணுவத்தினரும், கடற்படையினரும் காணியை தன்வசப்படுத்தியுள்ள நிலையில் குறித்த காணியினை அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் குறித்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

100 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் காணி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 150 குடும்பங்களுக்கு இது வரை காணி வழங்காத நிலையில் வழங்கப்பட்ட காணிகளை படைத்தரப்பினர் அபகரித்துள்ளதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமது குடியிறுப்புக்காணியினை உடனடியாக வழங்க வேண்டும் என கோரி ஞாயிற்றுக்கிழமை(09) காலை 11.30 மணிமுதல் குறித்த 150 குடும்பங்களும் மறிச்சிக்கட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'நாம் கேட்பது நாங்கள் இழந்த விவசாயக்காணியையும், குடியிறுந்த காணியையும், அரசினால் கைப்பற்றப்பட்ட எமது பூர்வீக காணியைத் திருப்பித்தா உட்;பட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி இருந்தனர்.

இதனால் நீண்ட நேரம் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் பாதீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மற்றும் சிலாபத்துரை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எகியான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்தரையாடினார்.

நாளை திங்கட்கிழமை(10) உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு குறித்த மக்கிளின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படும் என முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எகியான் இதன்போத தெரிவித்தார்.

எனினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம முஸ்ஸிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .