2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா விபத்தில் இருவர் காயம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைநதுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் வவுனியாவில் இருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தில் பின்புறமாக மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து நிறுத்தியபோதே பேரூந்தின் பின்புறமாக கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காரில் பயணித்த இருவரே காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேரூந்து ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .