2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'யுத்தமும் அதன் பின்னரான நிலைமையும்' புகைப்பட கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 11 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


'யுத்தமும் அதன் பின்னரான இலங்கையின் நிலைமையும்' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் காண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது.

இக்கண்காட்சியின்போது  வடபகுதியில் யுத்த காலத்தில்  இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வெடிப்புச் சம்பவங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள், மக்களின் அவலநிலை மற்றும்  தற்போதைய  அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமைவரை  (12) நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் க.சிவலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.ஜெயத்திலக்க, மாணவர்கள்   உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .