2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேறிய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்: ஹனைஸ் பாரூக்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

முல்லைத்தீவிற்கு செவ்வாய்க்கிழமை (11) வருகை தந்த ஹுனைஸ் பாரூக், மீள்குடியேறியுள்ள மக்களைச் சந்தித்து  பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணி, வீடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பிலும் ஹுனைஸ் பாரூக்கின் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை,  தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்திற்கும் ஹூனைஸ் பாரூக் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், இம்மக்களின் பிரச்சினைகளுக்கு  உரிய அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வை விரைவில்; பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .