2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாயும் மகளும் கைது; கண்டித்து போராட்டம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 14 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்றைய தினம் (13) ஜெயக்குமாரியும் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்தவுள்ளது.

காணாமல் போன இளைஞரொருவரின் தாயும் சகோதரியும் வசித்து வந்த வீட்டில் சந்தேக நபரொருவர் வசித்ததாக தெரிவித்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் வவுனியாவில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்டுள்ள தாய் மற்றும் மகளின் கைதை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் வவுனியா நகர மத்தியில் நாளை காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு பேராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இப்போராட்டத்தில் கட்சிபோதமின்றி அனைவரும் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .