2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் கைதான தாய் பூஸாவில்: மகள் நன்னடத்தை பிரிவில்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றிரவு ஆஜர்செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற அந்த தாய்க்கு  3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர், பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவருடைய மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .