2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அரசுக்கு புலிகளை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது: சிவசக்தி

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தெற்கில் அரசியல் செய்வதற்கு அரசு விடுதலைப்புலிகளை உயிர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா. ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இந் நேரத்தில் ஜெயக்குமாரியின் குடும்ப நிலையை சொல்லவேண்டிய தேவையுள்ளது. அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவருடைய இன்னுமோர் மகன் இந்த போராட்டத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார். அதேபோல் இன்னொரு மகன் முள்ளிவாய்க்கால் போரில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இந் நேரத்திலேயே அவருடைய மூன்றாவது மகன் இடம்பெயர்ந்து வவுனியா முகமில் தங்கியிரு;த நேரத்தில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். அந்த வகையில் ஜெயக்குமாரியின் மூன்று பிள்ளைகள் இன்று இல்லாமல் போயிருக்கின்றார்கள்.

இந்த வேளையிலேயே தனது 13 வயதான விபூசிகாவின் படிப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக ஜெயக்குமாரி நாளாந்தம் தினக்கூலி வேலை செய்தே காப்பாற்றி வந்துள்ளார்.

எனவே ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த நிலையிலேயே காணாமல் போன மற்றுமு; அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஜெயக்குமாரியும் அவருடைய மகளும் போராட்டங்களில் பங்கு பற்றியிருந்ததன் அடிப்படையில் ஊடகங்களில் முக்கியமான இடம்பிடித்திருந்தமையினால் தற்சமயம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடுர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த கைதுக்கு பல காரணங்கள் சொல்லபப்டுகின்றது. ஆனால் இந்த காரணங்கள் இன்றைக்கு உண்மையை மறைக்கும் விதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களாககவுள்ளது.

இந்த ஜெனீவா கூட்டத்தொடரில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் ஆயுதங்கள் வைத்தீரக்கின்றார்கள் அல்லது பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றது என பல புனைகதைகளை கூறி இன்று சோடிக்கப்படுகின்றது.

இன்று யுத்தம் முடிந்து 5 வருடம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு இடத்திலும் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. அல்லது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த சம்பவம் கூட திட்டமிட்டு சோடிக்கப்படும் கதையே ஆகும்.

ஆகவே மீண்டும் இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆயதபோராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவையுள்ளது. அதற்கு காரணம் தெற்கில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் இந்த ஆயத போராட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இந்த அரசுக்கு உள்ளது.

ஆகவே இந்த திட்டமிட்ட கைதுகள் கண்டிக்கப்படுவதோடு ஜெயக்குமாரி விடுதலை செய்யப்படவேண்டும். அத்தோடு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .