2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார்,வவுனியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மன்னாருக்கு விஜயம்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,வவுனியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரம சிங்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மன்னார் வருகை தந்த அவர் மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு மன்னார் பொலிஸாரின் குறை நிறைகளைக்கேட்டரிந்தார்.

மன்னார் வருகை தந்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரம சிங்கவை வரவேற்கும் முகமாக மன்னார் பொலிஸாரின் அணி வகுப்பு மறியாதை நிகழ்வொண்று இன்று காலை 7 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

குறித்த அணி வகுப்பு மறியாதை நிகழ்வு மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை தலைமையில் இடம் பெற்றது.இதன் போது இடம் பெற்ற அணிவகுப்பு மறியாதையினை பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரம சிங்க ஏற்றுக்கொண்டார்.

இதன் போது சிரேஸ்ட பொலிஸ் அத்தயட்சகர் சரத்குமார ஜோசப்,உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பி.ரி.சுகதபால ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இருதியாக மன்னார் பொலிஸ் நிலைய வாகனங்களும் மன்னார்,வவுனியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரம சிங்க அவர்களினால் பரிசோதிக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .