2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவேகானந்தநகர் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கு அனர்தங்களை எதிர்கொள்வது தொடர்பான முழுநாள் செயலமர்வு வெள்ளிக்கிழமை (14) வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்தச் செயலமர்விற்கு வேள்ல்ட் விசன் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

இந்தச் செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலர் இராஜரட்ணம் செந்தூரன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உளவள அலுவலர் தேவராஜா துஸ்யந்தன், ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அனர்த்தம் தொடர்பான கருத்துரைகளை வழங்கினார்கள்.

'மாணவர்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் வேள்ல்ட் விசன் நிறுவனத்தினால் அளிக்கப்படும் நிதியின் மூலமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு அனர்த்த பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .