2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

த.தே.ம.முன்னணியின் உயர்மட்டக்குழு ஜெனீவா பயணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு ஜெனீவாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (16)  மாலை புறப்பட்டுச் சென்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின வவுனியா மாவட்டச் செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்  ஆகியோரே ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர். 

ஐ.நா.வில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடர் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களைச் சந்தித்து ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பில், தமது நிலைப்பாட்டையும் தமிழர் தாயக பிரதேசங்களில் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .