2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு எதிராகவும் மன்னாரில் திங்கட்கிழமை (17)  காலை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் மூன்றாவது  தடவையாகவும் பிரேரணை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

மன்னார் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின்போது,  மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஒருதொகுதி மக்களும்  மன்னார் விளையாட்டு மைதான வீதியிலிருந்து ஒருதொகுதி மக்களும் பேரணியாக மன்னார் பஸார் பகுதியை வந்தடைந்தனர்.

பின்னர் இங்கிருந்து பேரணியாக  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜரை கையளித்தனர்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து  கோஷங்களை எழுப்பினர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .