2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வீதி சட்டத்தை மீறிய மூவருக்குத் தண்டம்

Kanagaraj   / 2014 மார்ச் 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரணியம் பாஸ்கரன்

வீதியில் சென்றுகொண்டிருந்தவர்களுக்கு இடையூறு விளைவித்த போதையில் இருந்த இருவருக்கும் வீதி ஒழுங்கை பின்பற்றாது வாகனம் செலுத்திய ஒருவருக்கும் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் இன்று (17) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பகுதியில் மதுபோதையில் நின்று வீதியில் பயணிப்போருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கடந்த 1 ஆம் திகதியும் வீதி ஒழுங்கைப் பின்பற்றாது வாகனம் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கடந்த 14 ஆம் திகதியும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து மேற்படி மூன்று நபர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று (17)  ஆஜர்ப்படுத்திய போதே, நீதவான் வீதி ஒழுங்கை பின்பற்றாது வாகனம் செலுத்தியவருக்கு 1000 ரூபா தண்டமும் மதுபோதையில் நின்று, வீதியில் பயணிப்போருக்கு இடையூறு விளைவித்த இருவருக்கு தலா 5000 ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .