2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குறுக்காக பாய்ந்த நாயால் விபத்து; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் வேப்பங்குளம் பகுதியில் திங்கட்கிழமை (17)  இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த  மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்று மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது நாயொன்று குறுக்காக பாய்ந்ததினால், மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற வவுனியாவைச் சேர்ந்த மரியதாஸ் ரமேஸ் (வயது 30), மகேந்திரராசா சுஜித் (வயது 22), மற்றும் நடந்துசென்ற வேப்பங்குளத்தை சேர்ந்த 35 வயது பெண்ணும் காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .