2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தெற்கு கல்வி வலயப் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வலயக் கல்வி அலுவலக முதன்நிலை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.அன்ரன் சோமராஜா தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.அன்ரன் சோமராஜா தலைமையில் நடைபெற்வுள்ள இப்;பயிற்சிப்பட்டறையில் கருத்துரைகளை கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ஆறுமுகம் சுபாஸ்கரன், தொழில் வழிகாட்டல் அதிகாரி திருமதி ந.க.கிரேனியர் உள்ளிட்ட பலர் ஆற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பயிற்சிப்பட்டறையில் சகல ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .