2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஈச்சங்குளத்தில் அட்டகாசம் புரிந்த யானை இறப்பு

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கடந்த நான்கு நாட்களாக வவுனியா, ஈச்சங்குளம், கருவேப்பங்குளம் பகுதியில் குடிமனைக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த காட்டு யானை இன்று (19) அதிகாலை இறந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில் யானை புகுந்து அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வந்திந்ததுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) அக்கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தனம் முத்துராஜா (வயது 42) என்பவரை தாக்கிய நிலையில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த யானை ஈச்சங்குளம் குளக்கட்டுப் பகுதியில் நடமாட முடியாதபடி காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் வன இலாகா அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சென்று பார்வையிட்டனர்.

இந்த யானை நோய்வாய்ப்பட்டுள்ளதாக வன இலாகா அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் மிருக வைத்திய அதிகரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் சுமார் 10 வயது மதிக்கத்தக்க அந்த யானையே இன்று காலை குளக்கட்டுப்பகுதியில் இறந்து காணப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .