2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் அபிப்பிராய பெட்டிகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள குறைநிறைகளை நோயாளர்கள் அறிவிப்பதற்காக 12 அபிப்பிராய பெட்டிகளை  பொருத்தியுள்ளதாக  அவ்வைத்தியசாலை அத்தியட்சகர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன்  நோயாளர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளன.

நோயாளர்களிடம் அபிப்பிராயங்களை கேட்பதனூடாக வைத்திய சேவையை  மேலும்  முன்னோக்கி நகர்த்த முடியுமெனக் கருதப்பட்டதால் இவ்;வைத்தியசாலையில் அபிப்பிராய பெட்டிகளை பொருத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் வைத்தியசாலையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பில் கருத்துக்களை இப்பெட்டிகளினுள் இடமுடியுமெனவும் அவர் கூறினார்.

இப்பெட்டிகளினுள் இடப்படும் கருத்துக்களும் உடனடியாக கவனத்திற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .