2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரமுயர்வு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பொது வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்  கு.அகிலேந்திரன்  தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வடமாகாண சபை  அமர்வில் இம்முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு தற்போது இவ்வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தரம் உயர்வு வைத்திய சேவையை மேற்கொள்ளும் எங்களுக்கு மேலும் உற்சாகமளிக்கிறது. இவ்வைத்தியசாலையின் தரம் உயர்வுக்கு பெரும் பங்காற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ந.குணசீலன் ஆகியோருக்கு இவ்வைத்தியசாலையின் சகல ஊழியர்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .