2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மதுச்சாலை முகாமையாளருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 21 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, கொரப்பத்தான வீதியிலுள்ள மதுபானச்சாலை ஒன்றில் வியாழக்கிழமை (20) மாலை இடம்பெற்ற கத்திக் குத்தில் காயமடைந்த அம்மதுபானச்சாலையின் முகாமையாளர் எஸ்.பத்மநாதன் (வயது 52) என்பவர்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்கத்திக் குத்தை தானே மேற்கொண்டதாக சந்தேக நபர் ஒத்துக்கொண்ட நிலையில் அவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இம்மதுபானச்சாலைக்கு முன்பாக  நின்றுகொண்டிருந்த முகாமையாளரை மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர்  கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முகாமையாளரை வவுனியா பொது வைத்தியசாலையில் அங்கிருந்தவர்கள் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .