2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கக் கோரி உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத் , எஸ்.றொசேரியன் லம்பேட்


காணாமல் போனவர்களை கண்டுபிடிக்குமாறு கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதம் மன்னார் பொது விளையாட்டு அரங்கு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த உண்ணாவிரதத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வியமைச்சர் குருகுலராஜா,  போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது 'இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே', 'தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வு வேண்டும்', 'மனித புதைகுழிகள் தொடர்பான சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்து', 'போர்க்குற்றம் மற்றும் மனித இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை உறுதிப்படுத்து' ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர்கள்  தாங்கியுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .