2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி இளைஞன் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 22 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது..

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்து நேற்று (21) தலைமன்னார் பொலவிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நாங்கள் விசாரனைகளின் பின் சனிக்கிழமை(22) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .