2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் கறுப்பு பட்டி போராட்டம்

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்படட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபனின் கொலையை கண்டித்து, வவுனியாவில் நேற்று (21) ஆசிரியர் கறுப்பு பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை ஆசிரியர்கள் தமது உடைகளில் கறுப்பு நிறத்திலான பட்டிகளையும் துணிகளையும் அணிந்து தமது கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிகளவான பாடசாலைகளில் இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததுடன் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையாத வகையில் கற்பித்தல் செயற்பாட்டையும் மேற்கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .