2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழு சந்திப்பு

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தும் மற்றும் அதன் செயற்பாடுகளை ஆராய்வது தொடர்பிலான விஷேட நிகழ்வொன்று சனிக்கிழமை (22) முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், முல்லைத்தீவு, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க , முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பன்டுவ வீரசிங்க உள்ளிட்ட இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், முல்லைத்திவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான். புதுக்குடியிருப்பு, வெலிஓய ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான். புதுக்குடியிருப்பு, வெலிஓய ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்வது, அதன் செய்ற்பாடுகள், அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் நன்மைகள் என்பன குறித்து வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துரையாடல் மூலம் வருகை தந்த சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் கிராம ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் பதிலளித்தார்.
 







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .