2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

செயற்கை கை, கால்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் தமது கை மற்றும் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கையிலான கை, கால்களை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சனிக்கிழமை முல்லைத்தீவு 59ஆம் படைபிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட 59ஆம் படைப் பிரிவின் அணுசரணையில் மலேசியாவிலுள்ள பொன்ஸ்கோ அமைப்பு மற்றும் மலேசியாவிலுள்ள 15 ரொட்ரி கழகங்கள் என்பனவற்றின் நிதி உதவியுடன் 45 பேருக்கு குறித்த செயற்கையிலான கை, கால்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட 59ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.டி.விக்ரமரத்ன தலமையில் நடைபெற்ற நிகழ்வில் மலேசியாவிலுள்ள பொன்ஸ்கோ அமைப்பின் தலைவர் எஸ்.குலசேகரம், மலேசியாவிலுள்ள ரொட்ரி கழக (3300) தலைவர் தாருள் அப்துல்லாஹ், கொழும்பு ரொட்ரி கழக தலைவர் ஜே.போடிதகொட, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .